/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பள்ளிகளில் ஆதார் பதிவு; 56,315 பேருக்கு அட்டை பள்ளிகளில் ஆதார் பதிவு; 56,315 பேருக்கு அட்டை
பள்ளிகளில் ஆதார் பதிவு; 56,315 பேருக்கு அட்டை
பள்ளிகளில் ஆதார் பதிவு; 56,315 பேருக்கு அட்டை
பள்ளிகளில் ஆதார் பதிவு; 56,315 பேருக்கு அட்டை
ADDED : ஜூன் 25, 2024 11:13 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 56,315 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் அரசின் இலவச நலத்திட்டங்களை பெற, மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு முறை மிக அவசியமாகிறது.
இதற்கு மாணவர்களின் ஆதார் அட்டை எண் அவசியம் என அரசு கருதுகிறது.
அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் பதிந்து அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
வயது 0 முதல் 5க்குள் புதிய ஆதார் பதிவு, 5 முதல் 7 வயதிற்குள் கட்டாய பயோமெட்ரிக் பதிவு, வயது 15 முதல் 17 க்குள் பயோமெட்ரிக் பதிவு புதுப்பித்தல், வயது 7 முதல் 15க்குள் புதிதாக ஆதார் பதிவு செய்தல் என திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக ஆதார் பதிவு செய்ய 8,846 மாணவர்களும், ஆதார் புதுப்பித்தல் 47, 469 மாணவர்கள் என ஒட்டு மொத்தமாக சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் 56 ஆயிரத்து 315 மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான பதிவு மேற்கொள்ளப்பட உள்ளது.