/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் கும்மி பாட்டு கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் கும்மி பாட்டு
கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் கும்மி பாட்டு
கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் கும்மி பாட்டு
கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் கும்மி பாட்டு
ADDED : ஜூலை 14, 2024 05:46 AM

கீழடி, : கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு வந்த பார்வையாளர்கள் பலரும் இணைந்து கும்மியடித்து பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கீழடிக்கு நேற்று அருங்காட்சியகத்தை காண திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்துகுளம் என்ற ஊரைச் சேர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் வந்தனர். அகழாய்வு நடந்த இடத்தை கண்ட அவர்கள் மகிழ்ச்சியில் இணைந்து வட்ட வடிவில் பண்டைய கால கும்மிப்பாட்டு பாடினர்.
கவிஞர் தேவயானி கூறுகையில்: 2600 ஆண்டுகளுக்கு முன் நாகரீகம் மிக்க மக்கள் வாழ்ந்த இடத்தில் நிற்பது பெருமை, அவர்கள் பயன்படுத்திய பொக்கிஷங்களை கண்டது அதனை விட பெருமை. அந்த மகிழ்ச்சியில் தமிழரின் பெருமை போற்றும் பண்டைய கும்மி பாடல்களை பாடினோம், என்றார்.
கீழடியில் நடந்து வரும் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக தண்ணீர் அகழாய்வு குழிகளில் இறங்கியதை அடுத்து நேற்று முழுவதும் தண்ணீரை வெளியேற்ற வடிகால் வெட்டும் பணி நடந்தது.