/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தரமற்ற புதிய மின்கம்பங்கள் உடைந்ததால் விபத்து அபாயம் தரமற்ற புதிய மின்கம்பங்கள் உடைந்ததால் விபத்து அபாயம்
தரமற்ற புதிய மின்கம்பங்கள் உடைந்ததால் விபத்து அபாயம்
தரமற்ற புதிய மின்கம்பங்கள் உடைந்ததால் விபத்து அபாயம்
தரமற்ற புதிய மின்கம்பங்கள் உடைந்ததால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 14, 2024 05:45 AM

காரைக்குடி, : காரைக்குடியில் மாற்றப்படும் புதிய மின்கம்பங்கள் பலவும் தரமற்றிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காரைக்குடியில் தற்போது மாற்றப்படும் புதிய மின்கம்பங்கள் பல தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும்
சி. மெ. வீதியில், சாலையோரம் நடப்பட்ட புதிய மின்கம்பத்தில் சிறிய வாகனம் ஒன்று மோதியதில் மின்கம்பம் இரண்டாக முறிந்தது. மின்கம்பத்தில் கனமான கம்பியும் இல்லை.
இந்திய கம்யூ., நகரச் செயலாளர் சிவாஜி காந்தி கூறுகையில்: காரைக்குடி நகரில் 20,30 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மின்கம்பம் தற்போது வரை உறுதியாக நிற்கிறது. ஆனால் தற்போது மாற்றப்படும் புதிய மின்கம்பங்கள் தரமற்று தயாரிக்கப்படுகிறது.
மின்கம்பத்தின் உயரம் அகலத்திற்கு ஏற்ப கம்பிகள் பொருத்தப்படுவதில்லை. தரமான சிமென்ட்டும் இல்லை.
இதுபோன்று உடைந்தால் பலத்த காற்று அடிக்கும் போதும், மழைக்காலங்களில் மிகப்பெரிய அபாயம் ஏற்படும்.
தற்போது வரும் மின்கம்பங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வதோடு தரமான மின்கம்பம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.