/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை
ADDED : ஜூன் 23, 2024 03:54 AM
மானாமதுரை: கள்ளக்குறிச்சியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததைதொடர்ந்து அதனை குடித்த 55 பேர் பலியாகிஉள்ளனர். 141 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாகவும், மறைமுகமாகவும் மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
மானாமதுரை போலீஸ் சப் டிவிஷனுக்கு உட்பட்ட மானாமதுரை,சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பூவந்தி, பழையனுார் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் சோதனை நடத்தினர்.