/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாசில்தார் அலுவலகங்களில் ஜூன் 18ல் ஜமாபந்தி தாசில்தார் அலுவலகங்களில் ஜூன் 18ல் ஜமாபந்தி
தாசில்தார் அலுவலகங்களில் ஜூன் 18ல் ஜமாபந்தி
தாசில்தார் அலுவலகங்களில் ஜூன் 18ல் ஜமாபந்தி
தாசில்தார் அலுவலகங்களில் ஜூன் 18ல் ஜமாபந்தி
ADDED : ஜூன் 14, 2024 04:49 AM
சிவகங்கை: மாவட்ட அளவில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் 1433ம் பசலி ஆண்டுக்கான வருவாய் கணக்கு தீர்ப்பாயம் குறித்த ஜமாபந்தி கூட்டம் ஜூன் 18 முதல் 25 வரை காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
* திருப்புவனம் தாசில்தார் அலுவலகத்தில் ஜூன் 18 ல் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் ஜமாபந்தி கூட்டம் தொடங்கும். அன்று கொந்தகை பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமம், ஜூன் 19 ல் திருப்புவனம் பிர்க்கா, ஜூன் 20 ல் திருப்பாச்சேத்தி பிர்க்காவிற்கு உட்பட்ட கிராம கணக்குகள் பார்வையிடப்படும்.
* காரைக்குடி தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.மோகனச்சந்திரன் தலைமையில், ஜூன் 18 ல் சாக்கோட்டை பிர்க்கா, ஜூன் 19 ல் கல்லல், ஜூன் 20 ல் பள்ளத்துார் , ஜூன் 21 காரைக்குடி, ஜூன் 25 ல் மித்ராவயல் பிர்க்காவிற்கு உட்பட்ட கிராம வருவாய் கணக்குகள் பார்க்கப்படும்.
* இளையான்குடி தாசில்தார் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பி.விஜயகுமார் தலைமையில் ஜூன் 18 அன்று தாயமங்கலம், ஜூன் 19 ல் இளையான்குடி, ஜூன் 20 திருவுடையார்புரம், ஜூன் 21ல் சாலைக்கிராமம், ஜூன் 25ல் சூராணம் பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்களின் கணக்குகள் பார்க்கப்படும்.
* திருப்புத்துார் தாசில்தார் அலுவலகத்தில் தேவகோட்டை கோட்டாட்சியர் எஸ்.பால்துரை தலைமையில் ஜூன் 18 ல் திருக்கோஷ்டியூர், ஜூன் 19 ல் இளையாத்தங்குடி, ஜூன் 20 ல் நாச்சியாபுரம், ஜூன் 21 ல் நெற்குப்பை, ஜூன் 25 ல் திருப்புத்துார் பிர்க்காவிற்கு உட்பட்ட கிராம கணக்குகள் பார்க்கப்படும்.
* காளையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் சிவகங்கை உதவி கமிஷனர் (ஆயம்) ஆர்.ரங்கநாதன் தலைமையில் ஜூன் 18 ல் நாட்டரசன்கோட்டை, ஜூன் 19 ல் காளையார்கோவில், ஜூன் 20 மறவமங்கலம், ஜூன் 21 ல் சிலுக்கப்பட்டி, ஜூன் 25 ல் மல்லல் பிர்க்காவிற்கு உட்பட்ட கிராம கணக்குகள் பார்வையிடப்படும்.
* தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் சி.ஜெயமணி தலைமையில், ஜூன் 18ல் தேவகோட்டை, ஜூன் 19ல் கண்ணங்குடி, ஜூன் 20ல் கண்டதேவி, ஜூன் 21ல் புளியால், ஜூன் 25ல் சருகணி பிர்க்காவிற்கு உட்பட்ட கிராம கணக்குகள் பார்க்கப்படும்.
* சிங்கம்புணரி தாசில்தார் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சீ.சபிதாள் பேகம் தலைமையில் ஜூன் 18ல் சிங்கம்புணரி, ஜூன் 19ல் வாராப்பூர், ஜூன் 20ல் எஸ்.எஸ்.,கோட்டை பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு நடைபெறும்.
* சிவகங்கை தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் பி.ஏ., (நிலம்) ஞா.சரவணபெருமாள் தலைமையில் ஜூன் 18 ல் சிவகங்கை, ஜூன் 19 ல் பெரியகோட்டை, ஜூன் 20 ல் ஒக்கூர், ஜூன் 21 ல் மதகுபட்டி, ஜூன் 25 ல் தமறாக்கி பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு நடக்கும்.
* மானாமதுரை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) பி.சிவக்குமார் தலைமையில் ஜூன் 18ல் செய்களத்துார், ஜூன் 19ல் முத்தனேந்தல், ஜூன் 20ல் மானாமதுரை பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்களின் வருவாய் கணக்குகள் சரிபார்ப்பு பணி நடைபெறும்.