/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 14, 2024 04:50 AM
சிவகங்கை: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு ஜூன் 19 க்குள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. முழுநேர கூட்டுறவு பயிற்சி 1 ஆண்டு காலம் நடைபெறும். செமஸ்டர் முறையில் தேர்வு நடைபெறும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம், பட்டயப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கால வரம்பு ஜூன் 19 வரை உள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.100. www.tncu.tn.gov.in@gmail.com இணையதளத்தில் விண்ணப்பித்து, பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை, சான்றிதழ் நகல்களுடன் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரடியாக சமர்பிக்க வேண்டும். இப்பட்டய பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோர் பயிற்சி கட்டணம் ரூ.18,750 யை ஒரே தவணையாக இணையவழி மூலம் செலுத்த வேண்டும். இது குறித்து விபரம் அறிய 04575 243 995 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.