நகை கடைகளில் கொள்ளையை தடுக்க யோசனை
நகை கடைகளில் கொள்ளையை தடுக்க யோசனை
நகை கடைகளில் கொள்ளையை தடுக்க யோசனை
ADDED : ஜூன் 14, 2024 04:50 AM
திருப்புவனம்: சிவகங்கை அருகே மதகுபட்டியில் அடகு கடையின் சுவரை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் நகை கடை உரிமையாளர்களுக்கு கடை பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கி உள்ளனர்.
திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நகைக்கடை, அடகு கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி செயலாளர்கள் பங்கேற்றனர்.
போலீசார் கூறும்போது: கடைகளில் கண்காணிப்பு கேமரா, அலாரம், வாட்ச்மேன் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும், என்றனர். கூட்டத்தில் திருப்புவனம் நகை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்