Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி 10ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ல் துவக்கம்

கீழடி 10ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ல் துவக்கம்

கீழடி 10ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ல் துவக்கம்

கீழடி 10ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ல் துவக்கம்

ADDED : ஜூன் 14, 2024 02:52 AM


Google News
கீழடி:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணி ஜூன் 18ல் துவங்குகிறது.

கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் வைகை நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு பணி துவங்கியது.

இந்த ஆய்வில் தாயகட்டை, வரிவடிவ எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், செங்கல் கட்டுமானம் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்தன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை ஆறு கட்ட (மொத்தம் 9 கட்ட அகழாய்வு) அகழாய்வுகளை நடத்தி முடித்தது.

9ம் கட்ட அகழாய்வு கடந்தாண்டு வீரணன் என்பவரது 35 சென்ட் நிலத்தில் ஏப்ரலில் துவங்கி செப்., வரை நடந்தது. இதில் 14 குழிகள் தோண்டப்பட்டு 453 கண்ணாடி மணிகள், 168 வட்டச்சில்லுகள், நான்கு காதணிகள், 15 செஸ் காயின் உள்ளிட்ட 804 பொருட்கள் கண்டறியப்பட்டன.

10ம் கட்ட அகழாய்வு ஜன., தொடங்கி செப்., வரை நடக்கயிருந்த நிலையில் இந்தாண்டு தாமதமாக துவகுகிறது. கடந்தாண்டும் தாமதமாக தொடங்கியதால் குறைந்த அளவு பொருட்களே கண்டறியப்பட்டன. இந்தாண்டும் தாமதமாக தொடங்குவதால் குறிப்பிட்ட அளவு பொருட்கள் கிடைக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் கீழடியுடன், வெம்பக்கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட எட்டு இடங்களிலும் அகழாய்வு பணி நடக்கவுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us