ADDED : ஜூலை 27, 2024 06:21 AM
கீழடி : கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் வீட்டில் காஸ் கசிவு காரணமாக தீப்பிடித்ததால் பெண் படுகாயமடைந்தார்.
பள்ளிச்சந்தை புதுரை சேர்ந்த ரியாஸ்கான் மனைவி ஆமினா 24, நேற்று முன்தினம் இரவு ஆமினா வீட்டைப் பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 9 :00 மணிக்கு வீட்டிற்கு வந்தவர் வீட்டினுள் காஸ் கசிந்து பரவி இருப்பதை அறியாமல் வீட்டை திறந்த உடன் ஸ்விட்சை போட்டுள்ளார். தீப்பொறி பறந்ததில் காஸ் கசிவு காரணமாக உடல் முழுவதும் தீப்பிடித்துள்ளது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நல்வாய்ப்பாக சிலிண்டர் வெடிக்கவில்லை. சிலிண்டர் வெடித்திருந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.