/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ துபாயில் இறந்த கணவர் உடலை மீட்க மனு துபாயில் இறந்த கணவர் உடலை மீட்க மனு
துபாயில் இறந்த கணவர் உடலை மீட்க மனு
துபாயில் இறந்த கணவர் உடலை மீட்க மனு
துபாயில் இறந்த கணவர் உடலை மீட்க மனு
ADDED : ஜூலை 27, 2024 06:20 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி ஊராட்சி சிவல்பட்டியை சேர்ந்தவர் குமார் 54. இவரது மனைவி லலிதா, 45. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் கடந்த 6 ஆண்டுக்கு முன் கட்டட வேலைக்காக துபாய்க்கு சென்றார். கடந்த 4 மாதமாக வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார். குமார் வேலை செய்ய கம்பெனியில் இருந்து, கடந்த 4 நாட்களுக்கு முன் குமார் இறந்து விட்டதாகவும், அவரது உடலை பெற்றுச்செல்லுமாறு லலிதாவிற்கு, கம்பெனி மனித வள மேலாளர் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல், ஏமாற்றிய கம்பெனியிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தருவதோடு, இறந்த குமாரின் உடலை சிவகங்கைக்கு கொண்டு வர உதவவேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை கலெக்டர் ஆஷா அஜித்திடம் வழங்கினர். ///