ADDED : ஜூன் 23, 2024 03:52 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் நிலைய செக் போஸ்ட் அருகே சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுஇருந்தனர். ராமநாதபுரம் காட்டுஊருணி வைகை நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்வரன் 24, மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு டூவீலரில் இரண்டு கிலோ 140 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது.
கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்த போலீசார் மகேஷ்வரனை கைது செய்தனர்.