ADDED : ஜூன் 23, 2024 03:52 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா பள்ளி லியோ சங்கம் இணைந்து மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தினர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைவர் ஏ.டி.விக்டர் தலைமை வகித்தார். தாளாளர் ரூபன் வரவேற்றார், மதுரை நிகில் பவுண்டேஷன் இயக்குநர் நாகலிங்கம்,ஜெயச்சந்திரன், ஐ.எப்.எஸ். அதிகாரி அஞ்சுகா, முன்னாள் மாணவர் பேராசிரியர் சேவற்கொடியோன்,பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் பேசினர். லியோ ஒருங்கிணைப்பாளர் ரெங்கசாமி ஒருங்கிணைத்தார்.