/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கிராம கண்மாய்களில் அழியும் உடைமுள் மரங்கள் விவசாயிகள் வேதனை கிராம கண்மாய்களில் அழியும் உடைமுள் மரங்கள் விவசாயிகள் வேதனை
கிராம கண்மாய்களில் அழியும் உடைமுள் மரங்கள் விவசாயிகள் வேதனை
கிராம கண்மாய்களில் அழியும் உடைமுள் மரங்கள் விவசாயிகள் வேதனை
கிராம கண்மாய்களில் அழியும் உடைமுள் மரங்கள் விவசாயிகள் வேதனை
ADDED : ஜூலை 09, 2024 05:09 AM

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார கிராம கண்மாய்களில் விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய உடை முள் மரத்தின் எண்ணிக்கை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள கண்மாய்களில் விவசாயிகள் தங்களுக்கு பயன்தர கூடிய உடைமுள் மரத்தை உட்புறமாகவும், புளிய மரம், பனைமரங்களை கரைகளிலும் வளர்த்து வந்தனர். கண்மாய்க்குள் வளர்க்கப்படும் உடைமுள் மரத்தில் பறவைகள் கூடு கட்டும் விதத்தை வைத்து மழை வருமா,கண்மாய் நிரம்புமா,இல்லையா என்று கணித்து வந்தனர்.
நாளடைவில் கண்மாய்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக உடைமுள் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது மானாமதுரை அருகே பறையன்குளம், குருந்தன்குளம், கொன்னக்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் ஒருசில மரங்கள் மட்டுமே உள்ளன. இதனையும் சிலர் வெட்டி கடத்தி வருகின்றனர்.நிலத்தடி நீரை சேமிக்கும் இந்த மரத்தை விவசாயிகள் விரும்பி வளர்ப்பது வழக்கமாக இருந்த நிலையில் நாளடைவில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் உடை முள் மரங்கள் மெல்ல,மெல்ல அடியோடு அழிந்து வருகின்ற நிலையில் இவற்றை வனத்துறையினர் மீட்டெடுக்க வேண்டுமென்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர
விவசாயிகள் கூறியதாவது: நன்றாக வளர்ந்த,வைரம் பாய்ந்த உடைமுள் மரங்களிலிருந்து எடுக்கப்படும் மரங்களை கொண்டு மாட்டு வண்டிகள்,கோடாரிகள், மண்வெட்டி போன்றவற்றை செய்து வந்தனர்.
தற்போது கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் உடைமுள் மரங்கள் மெல்ல,மெல்ல மறைந்து வருகிற நிலையில் வனத்துறையினர் மீண்டும் கண்மாய்களில் உடைமுள் மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.