/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரையில் பிரண்டை சேகரிக்கும் இளைஞர்கள் மானாமதுரையில் பிரண்டை சேகரிக்கும் இளைஞர்கள்
மானாமதுரையில் பிரண்டை சேகரிக்கும் இளைஞர்கள்
மானாமதுரையில் பிரண்டை சேகரிக்கும் இளைஞர்கள்
மானாமதுரையில் பிரண்டை சேகரிக்கும் இளைஞர்கள்
ADDED : ஜூலை 09, 2024 05:08 AM

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார காடுகளில் கிடைக்கும் பிரண்டை செடியை சேகரித்து நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்து இளைஞர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
மானாமதுரையில் காட்டுப்பகுதியில் அதிகளவில் பிரண்டை செடிகள் ஆங்காங்கே வளர்ந்து காணப்படுகிறது. பிரண்டை செடி நாட்டு மருந்து தயாரிக்க பயன்பட்டு வருவதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் பகுதி இளைஞர்கள் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் வளர்ந்துள்ள பிரண்டை செடிகளை சேகரித்து அதனை மருந்து கடைகளில் விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
பார்த்திபனுாரைச் சேர்ந்த சீனிவாசன் 28, கூறுகையில், பிரண்டை செடி இயற்கை முறையில் நாட்டு மருத்துவத்தில் ஏராளமான நோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது.
இவை செம்மண் பூமியில் அதிகளவில் வளரும் தன்மை கொண்டது. மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் காணப்படுவதால் நாங்கள் 5 பேர் கொண்ட குழுக்களாக சேர்ந்து பிரண்டை செடியை மொத்தமாக சேகரித்து அதனை சிறிய துண்டுகளாக வெட்டி காய்ந்த பிறகு அதனை விருதுநகரில் உள்ள மொத்த நாட்டு மருந்து கடையில் விற்பனை செய்து வருகிறோம்.எங்களுக்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ.600 லிருந்து ரூ.1000 வரை வருமானம் கிடைத்து வருகிறது. விவசாயம் இல்லாத நேரங்களில் இதனை மாற்றுத் தொழிலாக செய்து வருகிறோம் என்றார்.