/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எதிர்பார்ப்பு மானாமதுரைக்கு வருமா உழவர்சந்தை கிராம விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்குமா எதிர்பார்ப்பு மானாமதுரைக்கு வருமா உழவர்சந்தை கிராம விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்குமா
எதிர்பார்ப்பு மானாமதுரைக்கு வருமா உழவர்சந்தை கிராம விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்குமா
எதிர்பார்ப்பு மானாமதுரைக்கு வருமா உழவர்சந்தை கிராம விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்குமா
எதிர்பார்ப்பு மானாமதுரைக்கு வருமா உழவர்சந்தை கிராம விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்குமா
ADDED : ஜூலை 09, 2024 05:10 AM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க.,ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து ஒன்றியம் மற்றும் நகர் பகுதிகளிலும் உழவர் சந்தை அமைக்கப்படும் என்றும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உழவர் சந்தை அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கண்டு கொள்ளப்படாததால் அவையும் மேம்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மானாமதுரை ஒன்றிய பகுதிகளிலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் உழவர் சந்தை இல்லாத காரணத்தினால் மானாமதுரையை சுற்றியுள்ள திருப்பாச்சேத்தி,மாரநாடு,ஆவரங்காடு, முத்தனேந்தல், கால்பிரவு,பீசர்பட்டினம்,நத்தப் புரக்கி,செய்களத்துார்,கள்ளர்வலசை, ஆலம்பசேரி, மேலநெட்டூர், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக மானாமதுரைக்கு கொண்டு வந்து வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை.
விவசாயிகள் கூறியதாவது:
மானாமதுரை ஒன்றியம்,நகராட்சி பகுதிகளில் உழவர் சந்தை இல்லாத காரணத்தினால் நாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எங்களிடம் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கும் வியாபாரிகள் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் அடைகின்றனர். மாவட்ட நிர்வாகம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விரைவில் உழவர் சந்தை திறந்தால் விவசாயிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட்டு வியாபாரம் நடைபெறும். காய்கறிகளின் விலையும் குறைவதோடு எங்களுக்கும் ஓரளவிற்கு லாபம் கிடைக்கும் நிலை ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.