/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பைனான்ஸ் ஊழியரிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி காளையார்கோவிலில் துணிகரம் பைனான்ஸ் ஊழியரிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி காளையார்கோவிலில் துணிகரம்
பைனான்ஸ் ஊழியரிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி காளையார்கோவிலில் துணிகரம்
பைனான்ஸ் ஊழியரிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி காளையார்கோவிலில் துணிகரம்
பைனான்ஸ் ஊழியரிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி காளையார்கோவிலில் துணிகரம்
ADDED : ஜூலை 20, 2024 02:50 AM
சிவகங்கை : காளையார்கோவிலில் பைனான்ஸ் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.8.89 லட்சம் வழிப்பறி செய்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சிவகங்கைமாவட்டம் காளையார்கோவில் அருகே கிருஷ்ணா நகரில் பி.எஸ்.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. அதில் பணம் வசூலிக்கும் பணியில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சம்பைக்குளத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பழனிமுருகன் 24, ஈடுபட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் மதியம் 3:15 மணிக்கு பழனிமுருகன், டூவீலரில் அலுவலக பணம் 8 லட்சத்து 89 ஆயிரத்து 730 ஐ காளையார்கோவிலில் உள்ள தேசிய வங்கியில் கட்ட சென்றார். அவருடன் சக ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தை சேர்ந்த பாலுச்சாமி மகன் கண்ணனும் 23, சென்றார்.
காளையார்கோவில் -- கல்லல் ரோட்டில் அம்மையப்பர் நகர் அருகே எதிரே டூவீலரில் வந்த 3 பேர் இவர்களை வழிமறித்தனர். பழனிமுருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.8.89 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பினர். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரிக்கிறார்.