/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 04:23 AM
சிவகங்கை: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிவகங்கையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் முத்தையா தலைமை வகித்தார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வட்டக்கிளை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் பாண்டி, இணை செயலாளர் பயாஸ் அகமது, சின்னப்பன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், தனபால், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க பொருளாளர் சதுரகிரி, பிற்பட்டோர் நல விடுதி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோபால், பொதுப்பணித்துறை ஆட்சி பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஆனந்தநாகராஜன், சத்துணவு, அங்கன்வாடி பென்ஷனர் சங்க மாநில துணை தலைவர் பாண்டி பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.