ADDED : ஜூலை 25, 2024 04:23 AM
திருப்புவனம்: தமிழகத்தில் இந்தாண்டு பெய்த மழை காரணமாக வேப்பம் பூக்கள் அதிக அளவு பூத்ததால் வேப்பம் மர விதை (வேப்பங்கொட்டை)விலை சரிவை சந்தித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வளரும் வேப்ப மரங்களில் ஏப்ரல், மே மாதங்களில் பூக்கள் பூக்க தொடங்கும்.ஜூன், ஜூலையில் பழம் உருவாகும். கிராமப்புறங்களில் பலரும் வேப்பம்பழத்தை சேகரித்து அதன் தோலை நீக்கி விற்பனை செய்வார்கள். ஒரு மரத்தில் இருந்து ஐந்து முதல் பத்து கிலோ விதை வரை கிடைக்கும்.
சீசன் காலங்களில் ஒருகிலோ வேப்பமர விதை 165 ரூபாய் வரை விற்பனையாகும். இந்தாண்டு பெய்த மழை காரணமாக வேப்ப மரங்களில் பூக்கள் அதிகம் பூத்தது.
வேப்ப மரங்களில் பழங்களும் அதிகளவு காய்த்ததால் விலை குறைந்துள்ளது. கடந்தாண்டு ஒரு கிலோ 165 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 72 ரூபாய் என வியாபாரிகள் வாங்குகின்றனர்.