/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரூ.45 லட்சம் மோசடி நாமக்கல் நபர் கைது ரூ.45 லட்சம் மோசடி நாமக்கல் நபர் கைது
ரூ.45 லட்சம் மோசடி நாமக்கல் நபர் கைது
ரூ.45 லட்சம் மோசடி நாமக்கல் நபர் கைது
ரூ.45 லட்சம் மோசடி நாமக்கல் நபர் கைது
ADDED : ஜூலை 24, 2024 10:23 PM
சிவகங்கை:சிவகங்கையில் ஆன்லைனில் ரூ.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் நாமக்கல் இளைஞரை சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பெரியநரிக்கோட்டையை சேர்ந்தவர் ராபர்ட். இன்ஸ்ட்ராகிராம் விளம்பரத்தை பார்த்து பகுதி நேர வேலைக்கு முயற்சித்தார். அந்த லிங்க்கை தொட்ட போது அது ஒரு வாட்ஸ்அப் குழுவுக்கு சென்றது. அதில் பலர் பல லட்சம் சம்பாதித்தது போல் போட்டோ இருந்தது. இதனை நம்பிய ராபர்ட் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 10 தவணையில் ரூ.45 லட்சம் அனுப்பினார்.
ஆனால் அவர் முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கிடைக்க வில்லை. ஏமாந்ததை உணர்ந்த ராபர்ட் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் மகன் தினேஷ்குமார் என்பவர் வங்கி கணக்கிற்கு ராபர்ட் பணம் ரூ.15 லட்சம் சென்றது தெரியவந்தது.
சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் தினேஷ்குமாரை கைது செய்தனர்.
போலீசாரிடம் தினேஷ்குமார் கூறியதாவது: கடன் பிரச்னையில் இருந்தேன். நாமக்கல்லில் டீக்கடையில் இருந்த ஒருவர் வங்கி கணக்கு எண் கொடுத்தால் அதில் வரும் பரிமாற்றங்களுக்கு ஒரு சதவீத கமிஷன் தருவதாக கூறினார். அதன்படி அவர் கொடுத்ததில் ரூ.3 லட்சம் கிடைத்தது என கூறியுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிவகங்கை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., நமச்சிவாயம் கூறுகையில், பொதுமக்கள் யாரும் கமிஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யாருக்கும் வங்கி கணக்கு எண்ணை கொடுக்க வேண்டாம். கடன் செயலிகள் மூலம் கடனும் பெற வேண்டாம். ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற முயற்சி செய்யும் நபர் குறித்து 1930 என்ற ெஹல்ப்லைன் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றார் .
தொடர் விசாரணையில் மேலும் பலர் சிக்கலாம் என போலீசார் கூறினர்.