/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரையில் தொடர் மின்வெட்டு மின் சாதனங்கள் சேதத்தால் சேதம் மானாமதுரையில் தொடர் மின்வெட்டு மின் சாதனங்கள் சேதத்தால் சேதம்
மானாமதுரையில் தொடர் மின்வெட்டு மின் சாதனங்கள் சேதத்தால் சேதம்
மானாமதுரையில் தொடர் மின்வெட்டு மின் சாதனங்கள் சேதத்தால் சேதம்
மானாமதுரையில் தொடர் மின்வெட்டு மின் சாதனங்கள் சேதத்தால் சேதம்
ADDED : ஜூலை 22, 2024 04:58 AM
மானாமதுரை: மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடி காற்று வீச துவங்கியதை தொடர்ந்து அடிக்கடி மின் வெட்டும் ஏற்படுவதால் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன.
ஆடி மாத பிறப்பிற்கு பின் காற்று வேகமாக வீசி வருகிறது. இந்நிலையில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆடி காற்று வீச துவங்கியதை தொடர்ந்து அடிக்கடி ஏற்படும் மின் வெட்டினால் மின்சாதன பொருட்கள் சேதமடைவதோடு மட்டுமில்லாமல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை நகர் மற்றும் ஊரக பகுதிகளுக்கு சிப்காட் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் போது, சிப்காட் துணை மின் நிலையத்தில் அடிக்கடி மின்சாதன பொருட்கள் சேதமடைவதை தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைகின்றன. இப்பகுதியில் 30 நிமிடத்திற்கு ஒரு முறை மின்வெட்டு நிகழ்வதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியில் மின்வெட்டை சரி செய்ய வேண்டும்.