/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு மாநாடு சிவகங்கையில் ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு மாநாடு
சிவகங்கையில் ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு மாநாடு
சிவகங்கையில் ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு மாநாடு
சிவகங்கையில் ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு மாநாடு
ADDED : ஜூலை 22, 2024 04:58 AM
சிவகங்கை: சிவகங்கையில், தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜான்பீட்டர் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயதைனேஸ் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் கணேசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மனோகரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அழகப்பன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராமராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச் செயலாளர் வடிவேல் மாநாட்டை நிறைவு செய்தார். நிதி காப்பாளர் சிங்கராயர் நன்றி கூறினார். சென்னையில் ஜூலை 29 முதல் 31 வரை 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவது. அரசாணை 243 யை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவர வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு, ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.