/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வைகை ஆற்றில் மணல் திருட்டுக்கள் அதிகரிப்பு: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தவிப்பு வைகை ஆற்றில் மணல் திருட்டுக்கள் அதிகரிப்பு: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தவிப்பு
வைகை ஆற்றில் மணல் திருட்டுக்கள் அதிகரிப்பு: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தவிப்பு
வைகை ஆற்றில் மணல் திருட்டுக்கள் அதிகரிப்பு: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தவிப்பு
வைகை ஆற்றில் மணல் திருட்டுக்கள் அதிகரிப்பு: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தவிப்பு
ADDED : ஜூலை 22, 2024 05:00 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் தொடர் மணல் திருட்டால் வைகை ஆற்றில் மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகி வருகிறது.
திருப்புவனம், மதுரை உள்ளிட்ட நகரின் கட்டுமான தேவைக்கு வைகை ஆற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டாக வைகை ஆற்றில் மணல் குவாரி ஏதும் அமைக்கப்படாததால் எம் சாண்ட் மணல் வகைகளை கட்டட பணிகளுக்கு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
ஆனாலும் கட்டட உரிமையாளர்கள் தூண் அமைக்கவும், சென்ட்ரிங் பணிக்கும் ஆற்று மணல் இருந்தால் தான் கட்டடம் உறுதியாக இருக்கும் என நம்புகின்றனர்.
இவர்களை குறிவைத்து தலைச்சுமையாக மணல் திருட்டு திருப்புவனம்,புதூர், வடகரை, மடப்புரம் பகுதியில் நடந்து வருகிறது. தொடர் மணல் திருட்டால் வைகை ஆற்றின் பல இடங்களில் மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகி வருகின்றன.
மூடைகளில் கடத்தல்
திருப்புவனம் பாக்யாநகர், சிவ சிவ நகர் உள்ளிட்ட இடங்கள் வைகை ஆற்றை ஒட்டியே அமைந்துள்ளன. இப்பகுதியில் பகலிலும்,இரவிலும் தொடர்ந்து தலைசுமையாக மணல் திருட்டு நடக்கிறது. சிமிண்ட் சாக்கில் பாதி அளவு உள்ள ஒரு மூடை ரூ.60 முதல் 90 வரை விற்கப்படுகின்றன. புதிதாக கட்டுமான பணிகளுக்கு பலரும் தலைச்சுமையாக வைகை ஆற்றில் இருந்தே மணல் அள்ளி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வைகை ஆற்றை ஒட்டிய பிரமனூர் கால்வாய் உள்ளிட்ட பல இடங்கள் பள்ளமாகி விட்டன.
இப்பகுதியில் இருந்து திருப்புவனம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கிணறும் அமைந்துள்ளது. மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மணல் திருட்டு குறித்து வருவாய்த்துறைக்கு புகார் அளித்தால் கண்டு கொள்வதில்லை.
தடுக்கவேண்டும்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வைகை ஆறு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இம்மூன்று துறை அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாததால் மணல் திருட்டு அதிகளவு நடக்கிறது. மணல் திருட்டு காரணமாக உருவாகியுள்ள பள்ளங்களில் தேங்கும் தண்ணீரால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
திருப்புவனம் பகுதியில்இருந்து அதிகளவு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படும் நிலையில் மணல் திருட்டால் நிலத்தடி நீரும் வெகு பாதாளத்திற்கு சென்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து மணல்திருட்டை தடுக்க வேண்டும்.