/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை
கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை
கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை
கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 05, 2024 04:44 AM
தேவகோட்டை,: தேவகோட்டை அருகே பாவனக்கோட்டையில் நாகாடி தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கி செயல்படுகிறது. நேற்று முன்தினம் கொள்ளை கும்பல் வங்கி காவலாளி பூமிநாதனை தாக்கி டிரில்லர் மூலம் துளையிட்டு லாக்கரை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். காங்கிரீட் சுவர் என்பதால் உடைக்க முடியாததால் நகைகள் தப்பியது.
போலீஸ் தரப்பில் கூறியதாவது: தனிப்படை அமைக்கப்பட்டு திருடர்களை தேடி வருகிறோம். சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம். கொள்ளை கும்பல் காவலாளி பூமிநாதனை பின்னால் பிடித்து இழுத்ததோடு காலில் தான் வெட்டி உள்ளனர். அவரிடமும் விசாரிக்கிறோம். பின்புறத்தில் தாக்கியதாலும் மயங்கியதாலும் சரியாக தெரியவில்லை என்கிறார். விரைவில் கொள்ளை கும்பல் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.