/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சோழபுரம் சிவன் கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் சோழபுரம் சிவன் கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
சோழபுரம் சிவன் கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
சோழபுரம் சிவன் கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
சோழபுரம் சிவன் கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
ADDED : ஜூன் 21, 2024 04:27 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அருள்மொழி நாதர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஜூன் 12 அன்று கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் ஆனித்திருவிழா துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் ரிஷபம், பூதம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் 9ம் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் அருள்மொழி நாதரும், சிறிய தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன் எழுந்தருளினர். சுவாமி, அம்பாளுக்கு பக்தர்கள் சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர்.
நேற்று மாலை 4:45 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேர் மாலை 5:20 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பத்தாம் நாள் விழாவான இன்று மாலை பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும்.
கிராமத்தார்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.