Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பெண் குழந்தை பாதுகாப்பு  திட்ட முதிர்வு தொகை

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்ட முதிர்வு தொகை

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்ட முதிர்வு தொகை

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்ட முதிர்வு தொகை

ADDED : ஜூன் 21, 2024 04:27 AM


Google News
சிவகங்கை: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற ஜூன் 29 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாவட்ட அளவில் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001 ஆண்டு முதல் 2006 வரை பதிவு செய்து, வயது 18 பூர்த்தி அடைந்தும் முதிர்வு தொகை பெறாமல் உள்ளவர்களுக்கு முதிர்வு தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

சமூக நலம், மகளிர் உரிமை துறையின் கீழ் முதிர்வு தொகை பெறாமல் உள்ள பயனாளிகள் உரிய ஆவணம், வைப்பு நிதி பத்திர நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், பயனாளி வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், போட்டோவுடன் அனைத்து பி.டி.ஓ., அலுவலகங்களில் உள்ள சமூக விரிவாக்க அலுவலர்களிடம் ஜூன் 29க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us