/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை, திருப்புத்துாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மானாமதுரை, திருப்புத்துாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மானாமதுரை, திருப்புத்துாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மானாமதுரை, திருப்புத்துாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மானாமதுரை, திருப்புத்துாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜூலை 18, 2024 05:57 AM
சிவகங்கை : மானாமதுரை, திருப்புத்துாரில் ஜூலை 19 ல் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தனேந்தல், வாகுடி, வெள்ளிக்குறிச்சி, பெரும்பச்சேரி, ராஜகம்பீரம், கால்பிரவு, மிளகனுார், அன்னவாசல், குவளைவேலி, தீத்தான்பட்டி, அரசகுளம், கட்டிக்குளம், விளத்துார், தஞ்சாக்கூர், பெரிய ஆவரங்காடு, சுள்ளான்குடி ஆகிய கிராம மக்களுக்கு ராஜகம்பீரத்தில் உள்ள எம்.ஜே., திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும்.
அதே போன்று திருப்புத்துார் வட்டத்திற்கு உட்பட்ட வடமாவளி, காட்டாம்பூர், கருங்குளம், பிராமணம்பட்டி, திருக்கோஷ்டியூர், சுண்ணாம்பிருப்பு, ஆலம்பட்டி, கருப்பூர், மாதவராயன்பட்டி, திருக்களாப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு காட்டாம்பூர் சமுதாயக்கூடத்தில் முகாம் நடைபெறும். அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் முகாமில் மக்கள் மனுக்களை வழங்கலாம்.