ADDED : ஜூலை 18, 2024 05:57 AM
சிவகங்கை, : பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் கணிதத்துறை சங்கத் துவக்க விழா நடந்தது.
பேராசிரியர் ராமலெட்சுமி வரவேற்றார். முதல்வர் விசுமதி பேசினார். பரமக்குடி அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கணிதவியல் துறை தலைவர் பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேராசிரியர் சுபா சங்க செயல்பாடுகளின் திட்டங்கள் குறித்து பேசினார். பேராசிரியர் ஜனனி நன்றி கூறினார்.