Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பம்

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பம்

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பம்

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பம்

ADDED : ஜூலை 18, 2024 05:59 AM


Google News
சிவகங்கை : தமிழ் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் நாகராஜன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: 2024 ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு, தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.25,000, சான்றும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துடன் உரிய சான்றுகளை வைத்து, தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆக.,9 ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரத்திற்கு 04575 241 487ல் அறியலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us