/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : ஜூலை 18, 2024 06:05 AM

காரைக்குடி, : காரைக்குடி அருகே தொடர் மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால், அறுவடைப் பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் நெல் விதைப்பில் ஈடுபட்டனர். உழவு உரம் விதை என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அறுவடை காலத்தில் தொடர் மழை பெய்தது.
மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீர் வெளியேற பல நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கியது. தற்போது வரை ஈரப்பதம் காயாததால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயி பாண்டி கூறுகையில்: கடந்த பங்குனியில் 4 ஏக்கரில் ஆர்.என்.ஆர்., ரக நெல் சாகுபடி செய்தோம். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்த நிலையில் அறுவடை காலத்தின் போது தொடர் மழை பெய்தது.
தண்ணீரில் பயிர்கள் மூழ்கியது. இதனால் அறுவடை செய்ய முடியவில்லை. பயிர்கள் முளைக்க தொடங்கிவிட்டன. காய்ந்தவுடன் அறுவடை பணியில் ஈடுபட்டாலும் பாதிக்கு பாதி கூட லாபம் கிடைக்காது.