ADDED : ஜூலை 28, 2024 11:58 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் 54 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
திருப்புத்தூர் ரோட்டில் நடைபெற்ற இப்பந்தயத்தில் பெரிய, சின்ன, மற்றொரு சின்ன மாடு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கினர். பெரிய மாடுகளுக்கு 9 கி.மீ., சிறிய மாட்டிற்கு 5 கி.மீ., துாரம் என நிர்ணயித்து போட்டி நடத்தினர்.