ADDED : ஜூலை 28, 2024 11:57 PM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவிப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கரன் சிறப்பு வகித்தார். அரசு மருத்துவமனை உதவிப்பணி தொழிலாளர்களுக்கு வார, மகப்பேறு விடுமுறை தர வேண்டும். சம்பள உயர்வு தர வேண்டும் என தீர்மானித்தனர்.