இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தாய் மொழி கல்வி என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழ் துறை தலைவர் அப்துல்ரகீம் வரவேற்றார். துணை முதல்வர் முஸ்தாக் அகமதுகான் தலைமை வகித்தனர். தமிழ்துறை பேராசிரியர் இப்ராகிம் அறிமுகம் செய்தார்.
தாய் மொழியின் மேன்மை மற்றும் தமிழ் மொழியின் சிறப்பு, சிறுகதை படைப்பாற்றல் குறித்து தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் முருகன் பேசினார்.
பேராசிரியை ஷிபா நன்றி கூறினார். பேராசிரியை கோரிஜான் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.