தொடர் மழையால் விவசாயம் துவங்கியது
தொடர் மழையால் விவசாயம் துவங்கியது
தொடர் மழையால் விவசாயம் துவங்கியது
ADDED : ஜூன் 08, 2024 05:31 AM

காரைக்குடி : சாக்கோட்டையில் தொடர் மழையால் விவசாயிகள் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் பெரும்பாலும் போர்வெல் மூலமே விவசாயம் நடைபெறுகிறது. இவ்வாண்டு போதிய மழை இல்லாததால் கண்மாய்கள் பல தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் விவசாயிகள் விவசாயத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உழவு, உரம், விதைநெல், ஆட்கள் கூலி என ஏக்கருக்கு 20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து விவசாயிகள் தற்போது நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சாக்கோட்டை அருகே பெத்தாச்சி குடியிருப்பு பகுதியில் விவசாயிகள் நெல் விதைப்பு முடிந்து, நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் விவசாயம் குறைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடரும் மழையால் தண்ணீர் இருந்ததால் தற்போது நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். குண்டு நெல் ரக நெல் சாகுபடி செய்துள்ளோம்.