Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு: 39,242 பேர் பங்கேற்பு

சிவகங்கையில் நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு: 39,242 பேர் பங்கேற்பு

சிவகங்கையில் நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு: 39,242 பேர் பங்கேற்பு

சிவகங்கையில் நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு: 39,242 பேர் பங்கேற்பு

ADDED : ஜூன் 08, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை :வி.ஏ.ஓ., உதவியாளர் உட்பட 6244 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நாளை நடக்கிறது. இம்மாவட்டத்தில் 144 தேர்வு மையங்களில் 39,242 பேர் எழுத உள்ளனர். வினாத்தாள்கள் நேற்று சிவகங்கை கருவூலகத்தில் இருந்து தாலுகா கருவூலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், வனக்காப்பாளர் உள்ளிட்ட 6244 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு நாளை காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.

இதில், தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண், பொது அறிவு 75 வினாக்கள், திறனறிவும் மனக்கணக்கு, நுண்ணறிவும் 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண் வழங்கப்படும்.

நாளை நடக்கும் இத்தேர்வினை பள்ளி, கல்லுாரிகளில் உள்ள 144 தேர்வு மையங்களில், 39,242 பேர் எழுத உள்ளனர். 21 மாணவர்களுக்கு ஒரு தேர்வு அறை வீதம் ஒரு தேர்வு அறைக்கு தேர்வு கண்காணிப்பு அலுவலர் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குரூப் 4 தேர்வினை பாதுகாப்புடன் நடத்துவது குறித்து வருவாய், போலீசார்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உரிய பாதுகாப்புடன், முறையாக தேர்வினை நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

கருவூலகம் சென்றவினாத்தாள்: நாளை நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள் சிவகங்கை மாவட்ட கருவூலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த தாலுகாவில் உள்ள கருவூலகத்திற்கு வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us