/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துாரில் சராசரியை கடந்த கோடை மழை திருப்புத்துாரில் சராசரியை கடந்த கோடை மழை
திருப்புத்துாரில் சராசரியை கடந்த கோடை மழை
திருப்புத்துாரில் சராசரியை கடந்த கோடை மழை
திருப்புத்துாரில் சராசரியை கடந்த கோடை மழை
ADDED : ஜூன் 04, 2024 05:35 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் இந்த ஆண்டு கோடை மழை அதிகரித்து சராசரி அளவைக் கடந்துள்ளது.
பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெய்யும் மழை கோடை மழையாக கருதப்படுகிறது. திருப்புத்துார் பகுதியில் வழக்கமாக இந்த மாதங்களில் பெய்யும் மழைசராசரி 130 மி.மீ. ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மழை பெய்யவில்லை. ஏப்., மாதத்தில் ஒரு நாள் 7 மி.மீ. மட்டும் மழை பெய்தது. ஆனால் மே மாதத்தில் 8 நாட்கள் மழை பெய்தது. மே 21ல் மட்டும் அதிகபட்சமாக 69 மி.மீ. பெய்தது.
மொத்தத்தில் 157 மி.மீ. மழை பெய்து சராசரியைக் கடந்துள்ளது. கடந்த 2023ல் கோடை மழையாக 206 மி.மீ., 2022ல் 56 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. கிராமப்புறங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது. ஆனால் அதற்கான மழை மானி இல்லாததால் சரியான அளவு தெரியவில்லை. இந்தகோடை மழை குறுகிய காலத்தில் 10 நாட்களுக்குள் பெய்த மழை என்பதால் வயல்களில் ஈரம் அதிகரித்துள்ளது. அரிசினங்குடிப்பட்டியில் ஒரு எக்டேருக்கு அறுவடைக்கு தயாரான நெல் நீரில் மூழ்கியது.
தற்போது மண்ணில் ஈரமாக இருப்பதால் சிறிது நாட்கள் கழித்து உழவு துவக்க வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அடுத்து தென்மேற்கு பருவ மழை சரியான கால இடைவெளியில் பெய்தால் விவசாயிகள் ஆர்வமாக சாகுபடிக்கு இந்த ஆண்டு முயற்சி எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.