ADDED : ஜூலை 19, 2024 06:21 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி.மு.க., இளைஞரணி சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
விதி மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக தி.மு.க., இளைஞரணி பிரபு 28, இலக்கியதாசன் 38, மீது வி.ஏ.ஓ., பிரபு புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.