ADDED : ஜூலை 19, 2024 06:20 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அளவில் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்களை நியமித்து டி.ஐ.ஜி., துரை உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கைக்கு எஸ்.அன்னராஜ், மானாமதுரை எஸ்.அலெக்ஸ்ராஜ், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவுக்கு டி.மன்னவன், தேவகோட்டை தாலுகா (குற்றம்) ஏ.அந்தோணி செல்லத்துரை, இளையான்குடி பி.ஜோதி முருகன், கல்லல் எஸ்.வாசிவம், சிவகங்கை (மதுவிலக்கு) ஜெ.ஜெயராணி, திருப்புத்துார் (மகளிர்) பி.தேவகி, சிவகங்கை (மகளிர்) பி.ஜெயக்கொடி, தேவகோட்டை (மகளிர்) எஸ்.சி., மகேஸ்வரி, திருப்புத்துார் கே.எம்., பெரியார், பூவந்தி எம்.கலைவாணி, குன்றக்குடி டி.செல்வகுமார், திருப்பாச்சேத்தி ஜி.கலாராணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.