ADDED : மார் 12, 2025 12:52 AM
இளையான்குடி; சிவகங்கை அருகே உள்ள செங்குளம் பகுதியைச் சேர்ந்த திரவியம் மகன் தேவ சகாயம், இவர் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து கிராம பகுதிகளில் கிடை அமைத்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக இளையான்குடி சுற்று வட்டார பகுதியில் கிடை அமைத்து வந்த நிலையில் நேற்று மதியம் முனைவென்றி அருகே உள்ள கண்மாய் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 6 ஆடுகள் பலியானது.இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.