/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம்
சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம்
சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம்
சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம்
ADDED : மார் 12, 2025 12:49 AM

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி ஆதினத்துக்குட்பட்ட, இக்கோயிலில் மாசித் திருவிழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
காலை 8:30 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். மாலை 5:00 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
நான்கு ரதவீதிகளில் தேரை வடம் பிடித்து கிராமத்தினர் இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.