/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கொத்தனார் வீட்டில் ரூ.29 லட்சம் நகை கொள்ளை கொத்தனார் வீட்டில் ரூ.29 லட்சம் நகை கொள்ளை
கொத்தனார் வீட்டில் ரூ.29 லட்சம் நகை கொள்ளை
கொத்தனார் வீட்டில் ரூ.29 லட்சம் நகை கொள்ளை
கொத்தனார் வீட்டில் ரூ.29 லட்சம் நகை கொள்ளை
ADDED : ஜூலை 04, 2024 11:11 PM

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் முத்து, 55; கொத்தனார்.
முத்துவின் வீடு, வைகை ஆற்றங்கரையையொட்டி உள்ளது. கீழ்ப்பகுதியில் உறவினர்கள் குடியிருக்கின்றனர். மாடியில் முத்து குடியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன், முத்து குடும்பத்தினருடன் சொந்த ஊரான சின்னக்கண்ணுார் சென்றார்.
இதையறிந்த கொள்ளையர்கள் நேற்று முன்தினம் இரவு மாடிக்கு சென்று, இரும்புக் கம்பியால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த நகைகள், பூஜை அறை பையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.
நேற்று காலை கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட உறவினர்கள், முத்து மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
பீரோவிலிருந்த 65 சவரன் நகைகள், பூஜை அறையிலிருந்த 17,000 ரூபாய் கொள்ளை போனதாக முத்து போலீசாரிடம் தெரிவித்தார். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு, 29 லட்சம் ரூபாய்.
தடயவியல் நிபுணர்கள் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.