/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தேவகோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
தேவகோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
தேவகோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
தேவகோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
ADDED : ஜூலை 04, 2024 09:17 AM

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பாவனக்கோட்டை மெயின் ரோட்டில், நாகாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. பொன்னத்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன், 65, என்பவர் காவலாளியாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு வங்கியை சுற்றி பார்த்து விட்டு, வங்கி வெளிக்கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது ஒரு கும்பல், பூமிநாதனை அரிவாளால் தாக்கியது. மயங்கிய பூமிநாதனை துாக்கி சென்று, வங்கி அருகில் புதரில் வீசியது.
வங்கி உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல், தனியார் நகைகள் வைத்திருந்த லாக்கரை டிரில்லர் மூலம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது; உடைக்க முடியவில்லை. அப்போது தான், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கண்ட அந்த கும்பல், அதில் தங்கள் முகம் பதிவாகி இருந்ததை பார்த்து, கேமரா காட்சிகள் பதிவாகி இருந்த 'ஹார்ட் டிஸ்க்'கை எடுத்து, வெளியே ஓடி தப்பியது; லாக்கரில் இருந்த நகைகள் தப்பின.
அதிகாலை 2:00 மணிக்கு ரோந்து போலீசார் நோட்டில் கையெழுத்து வாங்க வந்தனர். வழக்கமாக, ஜன்னல் அருகில் வைக்கப்பட்டிருக்கும் நோட்டில் கையெழுத்திடும் போலீசார், வங்கி கதவு திறந்து இருப்பதையும், கேமரா உடைக்கப்பட்டு இருந்ததையும் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.
காவலாளி பூமிநாதனை தேடிய போது, அருகில் அவரின் முனகல் சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்த்த போது, வெட்டு காயங்களுடன் அவர் கிடந்தார். அவரை மீட்டு, தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எஸ்.பி. டோங்கரே, டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கொள்ளை முயற்சி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.