/உள்ளூர் செய்திகள்/சேலம்/வி.ஆர்.ஐ., - 10 விதை முன்பதிவு செய்ய அறிவுரைவி.ஆர்.ஐ., - 10 விதை முன்பதிவு செய்ய அறிவுரை
வி.ஆர்.ஐ., - 10 விதை முன்பதிவு செய்ய அறிவுரை
வி.ஆர்.ஐ., - 10 விதை முன்பதிவு செய்ய அறிவுரை
வி.ஆர்.ஐ., - 10 விதை முன்பதிவு செய்ய அறிவுரை
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் சித்திரை, வைகாசி பட்டத்தில், 1,100 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
எதிர் வரும் ஆடி பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய, விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது:வி.ஆர்.ஐ., - 10 ரக நிலக்கடலை விதை, ஆடி, ஐப்பசி பட்டத்தில் சாகுபடிக்கு ஏற்றது. 90 -- 95 நாட்களில் முதிர்ச்சி அடையும். காரீப், ரபி பருவங்களில் சாகுபடி செய்யலாம். காரீப் பருவத்தில் ஹெக்டேருக்கு, 2,535 கிலோ, ரபி பருவத்தில் ஹெக்டேருக்கு, 2,448 கிலோ மகசூல் கிடைக்கும். 100 விதைகளின் எடை, 47 முதல், -55 கிராம் இருக்கும். மற்ற ரகத்தை விட, 46 முதல், 48 சதவீதம் எண்ணெய் சத்து கூடுதலாக இருக்கும். இலைப்புள்ளி, துரு நோய், சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலை உண்ணும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் கொண்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து மானியத்தில் விதை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.