Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

ADDED : ஜூலை 12, 2024 07:23 AM


Google News
சேலம்: ‍சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜன் அறிக்கை:தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024ம் ஆண்டின் நேரடி சேர்க்கை கடந்த, 1ல் தொடங்கி நடந்து வருகிறது.

வரும், 15 வரை சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் நேரில் வந்து சேர்க்கை விண்ணப்பங்களை பதிவு செய்து, ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.இங்கு கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர், வரவேற்பு கூட அலுவலக உதவியாளர், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர், கட்டட பட வரைவாளர், கம்மியர் மின்னணுவியல், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட தொழிற்பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளுக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர், பெறாதவர், பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் பெற, www.skiltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். மேலும், 9626942888, 9940966090 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us