/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஊடுபயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு அறிவுரைஊடுபயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு அறிவுரை
ஊடுபயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு அறிவுரை
ஊடுபயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு அறிவுரை
ஊடுபயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
வீரபாண்டி: விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடியில் கூடுதல் லாபம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை:ஊடு பயிர் சாகுபடி செய்வதால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதோடு பூச்சி தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கும்.
மக்காச்சோளம், நிலக்கடலையில் ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதால் புரோடினியா புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.சோளம் பயிரிட்டால் குருத்து ஈக்கள், தண்டு துளைப்பான் ஆகியவை கட்டுப்படும். கரும்பில் தக்கைப்பூண்டு ஊடுபயிர் செய்தால் தண்டு துளைப்பான் பூச்சிகள் கட்டுப்படும்.கரும்பு பயிரில் வெங்காயம் சாகுபடி செய்தால் இடைக்கணுப்புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். வெங்காய வயல்களில் வரப்பு ஓரங்களில் ஆமணக்கு சாகுபடி செய்தால் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். நெல் பயிரில் தட்டைப்பயறு பயிரிட்டால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை தடுக்க முடியும்.நிலக்கடலையில் கம்பு கலப்பு பயிராக சாகுபடி செய்வதால் சுருள் பூச்சிகள், இலைப்பேன், அந்துப்பூச்சிகளை தடுக்கலாம்.இதுபோன்று தனி பயிராக சாகுபடி செய்யாமல் ஊடுபயிராக சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெற வேண்டும்.