/உள்ளூர் செய்திகள்/சேலம்/சங்கிலி, மொபைல் பறிப்பு; 2 பேருக்கு 7 ஆண்டு சிறைசங்கிலி, மொபைல் பறிப்பு; 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
சங்கிலி, மொபைல் பறிப்பு; 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
சங்கிலி, மொபைல் பறிப்பு; 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
சங்கிலி, மொபைல் பறிப்பு; 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
சங்ககிரி: ஈரோடு மாவட்டம் மலங்குட்டை, செல்வம் நகரை சேர்ந்தவர் மதன், 21.
தனியார் நிறுவன ஊழியர். இவருடன் பணிபுரிபவர், சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த வினோத் கண்ணன், 21. இவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி வந்தனர். இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள பாரில் மது அருந்தியபோது, அங்கிருந்த சங்ககிரியை சேர்ந்த கவுதம்நிவாஷ், 24, அசோக், 24, ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. பின், 4 பேரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்தினர்.இந்நிலையில், 2021 மார்ச், 21ல் மது அருந்தியபோது, மதன், வினோத் கண்ணன் ஆகியோரை தாக்கி அவர்களிடம் இருந்த, 2.5 பவுன் சங்கிலி, 2 மொபைல் போன்களை, கவுதம் நிவாஷ், அசோக் பறித்துள்ளனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம், 1ல் நடந்தது. அதில் நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று முன்தினம், கவுதம் நிவாஷ், அசோக் ஆகியோருக்கு தலா, 7 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.