/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கல்லுாரி சித்தாந்தா குழும நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கல்லுாரி சித்தாந்தா குழும நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கல்லுாரி சித்தாந்தா குழும நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கல்லுாரி சித்தாந்தா குழும நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கல்லுாரி சித்தாந்தா குழும நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 17, 2025 01:46 AM
சேலம் :சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சென்னை சித்தாந்த அறிவு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து விழா, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலை கருத்தரங்க அறையில் நடந்தது.
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையின், இணை துணைவேந்தர் சபரிநாதன் தலைமை வகித்தார். பல்கலை கழக பதிவாளர் நாகப்பன் வாழ்த்தி பேசினார். தேர்வு கட்டுப்பாட்டாளர் மணிவண்ணன், பல்கலை கல்வியியல் இயக்குனர் ராஜன் சாமுவேல் கலந்து கொண்டனர்.
சென்னை சித்தாந்தா குழும நிறுவனங்களின் இயக்குனர் சுப்பிரமணியம், சென்னை சித்தாந்த அறிவு அறக்கட்டளை துணை இயக்குனர் சீனிவாசன், சித்தாந்த அறிவு அறக்கட்டளை நிறுவன மேலாளர் பிரியா கார்த்திக், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், கையாளுதல் நிகழ்வு நடந்தது. கணினி அறிவியல் துறைத்தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.