ADDED : செப் 17, 2025 01:46 AM
கெங்கவல்லி :கெங்கவல்லி வட்டார வேளாண்துறை சார்பில், நேற்று தம்மம்பட்டி
யில், உழவரைத் தேடி வேளாண் திட்ட முகாம், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானப்பிரியா தலைமையில் நடந்தது. முகாமில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள், சாகுபடி மற்றும் அரசு மானிய திட்ட விபரங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, கொத்தவரை, கீரை உள்பட ஆறு வகையான விதை பாக்கெட்டுகளை வழங்கினர். மானியத்தில் விதைகள் பெற விரும்பும் விவசாயிகள், ஆதார் நகல் வழங்கி, தோட்டக்கலை அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டது.உதவி தோட்டக் கலை அலுவலர்கள் ராஜேஷ், செல்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.