/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆத்துார் டவுனில் மிதமான வேகத்தில் பஸ்களை இயக்க அறிவுறுத்தல் ஆத்துார் டவுனில் மிதமான வேகத்தில் பஸ்களை இயக்க அறிவுறுத்தல்
ஆத்துார் டவுனில் மிதமான வேகத்தில் பஸ்களை இயக்க அறிவுறுத்தல்
ஆத்துார் டவுனில் மிதமான வேகத்தில் பஸ்களை இயக்க அறிவுறுத்தல்
ஆத்துார் டவுனில் மிதமான வேகத்தில் பஸ்களை இயக்க அறிவுறுத்தல்
ADDED : செப் 17, 2025 01:47 AM
ஆத்துார் :ள்அதிவேகமாக அரசு பஸ் இயக்கிய வீடியோ வைரலானதால், ஆத்துார் டவுன் பகுதிக்குள் மிதமான வேகத்தில், பஸ்களை இயக்க வேண்டும் என, கிளை மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.ஆத்துார் அருகே, செல்லியம்
பாளையம் பகுதியில், நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து, ஆத்துார் நோக்கி வந்த அரசு பஸ்சை, அதிவேகமாக ஓட்டிச் சென்றார். அந்த பஸ்சில் வந்த பயணி ஒருவர், டிரைவரிடம் வேகமாக பஸ் ஓட்டி வருவது குறித்து கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வைரலானதால், அரசு போக்குவரத்து அலுவலர்கள் விசாரணை செய்தனர்.
நேற்று, ஆத்துார் கிளை பணிமனை மற்றும் ஆத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள நேரம் கண்காணிப்பு அலுவலகம் பகுதியில் உள்ள அறிவிப்பு பலகையில், கிளை மேலாளர் ராஜா, 'அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள், ஆத்துார் டவுன் பகுதிக்குள் வரும்போது, மிதமான வேகத்தில் வரவேண்டும். பொதுமக்கள், பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இயக்க வேண்டும்.
குறிப்பாக, அரசு மருத்துவமனை, பள்ளி அமைந்துள்ள இடங்களில், கவனமுடன் செல்ல வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.