ADDED : செப் 17, 2025 01:46 AM
ஆத்துார் :ஆத்துார் அருகே, பைத்துார் ஊராட்சி, நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய
குமார்,
40. கூலித் தொழிலாளியான இவரது குடிசை வீட்டில், நேற்று காலை, 7:00
மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. விஜயகுமார், அவரது மனைவி பிரேமா
ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இல்லாததால், தீ
வேகமாக பரவியது. அப்பகுதி மக்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
தீ
விபத்தில், வீட்டினுள் இருந்த துணிகள், 22 ஆயிரம் ரூபாய்,
பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. தீ விபத்து
குறித்து, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.