/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு
விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு
விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு
விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு
ADDED : செப் 17, 2025 01:45 AM
சேலம், :சேலத்தில் விஜய் பிரசார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கோரி, த.வெ.க., சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்கான அட்டவணையை அறிவித்து, திருச்சியில் கடந்த வாரம் துவக்கினார்.
இதில், சேலம் மாவட்டத்தில் டிச., 13ல், பிரசாரம் செய்ய உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு, அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று முன்தினம் த.வெ.க., சேலம் மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்தனர்.